மெட்டா நிறுவனத்திற்கு $25 பில்லியன் அபராதம்: நியூ மெக்சிகோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
New Mexico court fined $25bn to Meta for data privacy lies மெட்டா நிறுவனத்திற்கு சுமார் $25 பில்லியன் அபராதம் விதித்து நியூ மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு $25 பில்லியன் அபராதம்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு கிட்டத்தட்ட $25 பில்லியன்(சுமார் 2.1 லட்சம் கோடி) அபராதமாக விதித்து நியூ மெக்சிகோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வார தீவிர விசாரணைக்கு பிறகு பயனர்களின் தரவுகள் கையாண்ட விதம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வந்த தொடர்ச்சியான பொய் பிரச்சாரங்கள் ஆகியவை நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நியூ மெக்சிகோ நீதிமன்ற நீதிபதி ஆற்றிய உரையில், மெட்டா நிறுவனத்தின் இந்த தவறான தகவல்கள் மெட்டா நிறுவன பயனர்களின் தனியுரிமை மீறலுடன் மட்டும் நின்று விடாமல் பேஸ்புக் நிறுவனத்தின் வணிக அமைப்பின் அடிப்படையையே பாதிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மிகப்பெரிய அபராதம்
நியூ மெக்சிகோ நீதிமன்றம் விதித்த இந்த $25 பில்லியன் அபராதம் என்பது மெட்டா நிறுவனத்திற்கு இதுவரை விதிக்கப்பட்ட அபராதத்திலேயே மிகப்பெரிய அபராதம் ஆகும்.
இதற்கு முன்னதாக கலிஃபோர்னியா மாநிலத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் மெட்டா நிறுவனம் மேற்கொண்ட $18 பில்லியன் ஒப்பந்தத்தை விட தற்போதைய அபராதம் மிக அதிகமானது ஆகும்.
நியூ மெக்சிகோ நிறுவனத்தின் இந்த $25 பில்லியன் அபராதத்திற்கு மெட்டா நிறுவனத்தின் வழக்கறிஞர் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் வழக்கறிஞர் குழுவின் தலைமை சட்ட அதிகாரி சி.ஜே மஹோனி வழங்கிய தகவலில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதில் தங்களுக்கு ஆதரவாக நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதித்தால் நியூ மெக்சிகோவில் தொழில் செய்யவே வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்துள்ளார்.