மெட்டா வெரிஃபைடு சேவை இந்தியாவில் அறிமுகம்: புளூ டிக்கிற்கான மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா?
மெட்டா நிறுவனம் கட்டண வெரிஃபைடு சேவை முறையை இந்தியாவிலும் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.
வெரிஃபைடு சேவை
இந்தியாவில் அறிமுகம் ட்விட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதை தொடர்ந்து, வெரிஃபைடு சேவைகளுக்கு புதிய கட்டண முறையை அறிமுகம் செய்து வைத்தார்.
இதனை தற்போது மெட்டா நிறுவனமும் தங்களது சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றில் அறிமுகப்படுத்தியுள்ளது.
getty
சோதனை முயற்சிகளாக பல்வேறு உலக நாடுகளில் இதனை முதலில் அறிமுகப்படுத்திய மெட்டா நிறுவனம், தற்போது இதனை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வெரிஃபைடு சேவைகளை பெற பயனர்கள் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மாத கட்டணத்தின் விலை
மெட்டா நிறுவனத்தின் இந்த வெரிஃபைடு சேவைகள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் நேரடியாக கிடைக்கிறது.
cointelegraph
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளுக்கு மாதாந்திர சேவை கட்டணம் 699 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக வலைதளங்களுக்கு வெரிஃபைடு சேவைகளின் விலை மாதம் 599 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.