த்ரெட்ஸ் அறிமுகத்திற்கு பிறகு ட்விட்டருக்குத் திரும்பிய மெட்டா முதலாளி!
த்ரெட்ஸ் அறிமுகத்தைத் தொடர்ந்து, மெட்டா முதலாளி மார்க் ஜுக்கர்பெர்க், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ட்விட்டருக்குத் திரும்பியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் ட்வீட்
Threads ஆப்பை அறிமுகப்படுத்திய பிறகு, META தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட்டின் மூலம் ஜுக்கர்பெர்க் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ட்விட்டரில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஸ்பைடர் மேன்
இரண்டு ஸ்பைடர் மேன் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டும் படத்தை ஜுக்கர்பெர்க் ட்வீட் செய்துள்ளார். ஆனால், படத்திற்கு அவர் எந்த தலைப்பும் கொடுக்கவில்லை.
அந்த படத்தில் இரண்டு ஸ்பைடர்மேன்கள் ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டுவதுபோல உள்ளது. இந்த படத்தை ஜுக்கர்பெர்க் ட்வீட் செய்ததற்கான உள்ளர்த்தம் தெரியவில்லை.
ஜுக்கர்பெர்க் கடைசியாக 2012-ல் ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Mark Zuckerberg (@finkd) July 6, 2023
ட்விட்டருக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் நோக்கில் மெட்டாவின் Threads அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், முதல் இரண்டு மணி நேரத்தில் 20 லட்சம் பயனர்களும், நான்கு மணி நேரத்தில் 50 லட்சம் பயனர்களும் Threads-ல் பதிவு செய்துள்ளனர். Threads ஆப்ஸ் இப்போது Android மற்றும் iOS இல் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |