8,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா - என்ன காரணம்?
மெட்டா நிறுவனம் 8,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா
AI பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் செய்யும் கோடிங் எழுதுவது உள்ளிட்ட வேலைகளை AI செய்வதால், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக அமேசான், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்கள் பாரிய அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
2026 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 73,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, மெட்டாவும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் உள்ளிட்ட பிரபல சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமாக மெட்டா உள்ளது.
8,000 ஊழியர்கள் நீக்கம்
மே 20ஆம் தேதி முதல் தொடங்கும் முதல் கட்ட பணிநீக்கத்தில், மெட்டா உலகளவில் 8,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.
ஆண்டின் இரண்டாம் பாதியில் மேலும் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நிறுவனத்தின் உள் செயல்பாடுகளை மாற்றியமைக்க திட்டமிட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல நூறு பில்லியன் டொலர்களை முதலீடு செய்து வருகிறார்.
AI மூலம் சில பணிகளை தானியங்கி முறையில் செய்ய முடிவதால் ஊழியர்களின் தேவை குறைந்துள்ளது.
AI தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் நிறுவனத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டால், பணிநீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |