90 வயதில் வாழும் உலகின் மிக வயதான மீன்!
மெதுசெலா என பெயரிடப்பட்டுள்ள அவுஸ்திரேலிய நுரையீரல் மீன் ஒன்று, உலகின் மிக வயதான வாழும் மீன் என்று நம்பப்படுகிறது.
மெதுசேலா (Methuselah) 4-அடி நீளம் மற்றும் சுமார் 40-பவுண்டு எடை கொண்ட அவுஸ்திரேலிய நுரையீரல் மீன் (Australian lungfish) ஆகும்.
அத்திப்பழங்களை விரும்பி உண்ணும் இந்த மீன், 1938-ல் அவுஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸுக்கு கொண்டு வரப்பட்டது.
மெதுசேலாவின் சரியான வயது தெரியவில்லை என்றாலும், கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸின் உயிரியலாளர்கள் மெதுசேலாவுக்கு சுமார் 90 வயது இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கிராண்ட்டாட் (Granddad) என்று பெயரிடப்பட்ட மிகப் பழமையான அவுஸ்திரேலிய நுரையீரல் மீன் சிகாகோவில் உள்ள ஷெட் மீன்வளத்தில் வசித்து வந்தது, அது 2017-ல் 95 வயதில் இறந்தது.
அவுஸ்திரேலிய நுரையீரல் மீனுக்கு நுரையீரல் மற்றும் செவுள்கள் உள்ளன, மேலும் இது மீன் மற்றும் நிலநீர் வாழ் உயிரினங்களுக்கு (amphibians) இடையிலான பரிணாம வளர்ச்சியின் இணைப்பாக நம்பப்படுகிறது.
Methuselah மீனின் பெயர் பைபிளிலிருந்து வந்தது. பைபிளில், Methuselah நோவாவின் தாத்தா மற்றும் அவர் 969 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ABC7News-ல் தெரிவித்துள்ளது.
மெதுசெலாவைத் தவிர, கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸில் இன்னும் இரண்டு அவுஸ்திரேலிய நுரையீரல் மீன்கள் உள்ளன, அவை அவற்றின் 40 அல்லது 50 வயதுகளில் இருப்பதாக நம்பப்படுகிறது.