உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பாரிஸ்: மெட்ரோ ரயில் நிலையங்களில் பெயர் திருத்தம்!
உக்ரைனில் போர் நாளுக்குநாள் மோசமடைந்து கொண்டு இருக்கும் நிலையில், அந்த நாட்டை ஆதரிக்கும் விதமாக, ஐரோப்பாவில் உள்ள பாரிஸ் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஐரோப்பிய உக்ரைன் என பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்ய இடையே எட்டாவது நாளாக இன்றும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனின் மீதான ரஷ்யாவின் இந்த போரை கண்டித்து, பல உலக நாடுகள் பல்வேறு தடைகளை அறிவித்து வருகிறது. இந்த போரை உடனடியாக நிறுத்த கோரி ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
The "Europe" metro station in #Paris has been renamed into "Europe-#Ukraine". pic.twitter.com/XReHXayDZ5
— NEXTA (@nexta_tv) March 3, 2022
மேலும், இந்த போர் நடவடிக்கைகளை எதிர்த்து பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், உதாரணமாக, ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் சுமார் 1 மில்லியன் பொதுமக்களால் இணைந்து நடத்திய பேரணி, ரஷ்யாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என அனைத்து பக்கங்களில் இருந்தும் போருக்கான எதிர்ப்புக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அந்தவகையில், ரஷ்ய போரை எதிர்த்து உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரமான பாரிஸில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரை ஐரோப்பிய உக்ரைன் என பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ளனர்.