அம்மாவை பார்த்த பின் பிரிந்த மெட்டி ஒலி உமா உயிர்! கண்கலங்க வைக்கும் தகவல்
பிரபல சீரியல் நடிகையான உமா மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிய சீரியல் என்றா, மெட்டி ஒலி தான், இந்த சீரியல் இப்போதும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதற்கென்று ஒரு தனி ரசிகர்களின் கூட்டம் உள்ளது. இந்நிலையில், இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகமான நடிகை உமா, அதன் பின் மஞ்சள் மகிமை, ஒரு கதையின் கதை உள்ளிட்ட பல சீரியல்களிலும், சில படங்களில் நடித்து பிரபலமானார்.
ஆனால், திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து ஒதுங்கிய இவர், இன்று காலை உடல்நலக் குறைவாக உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு சீரியல் பிரபலங்கள், குறிப்பாக மெட்டி ஒலி பிரபலங்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த உமா, தாயாரின் சொந்த ஊரான ஈரோட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை திடீரென்று அவர் ரத்த வாந்தி எடுத்து அவதிப்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அவர் வரும் வழியிலே உயிர் பிரிந்துள்ளது. இது குறித்து அவருடைய நெருங்கிய தோழியும், மெட்டி ஒலி சீரியலில் நடித்தவருமான அம்மு ராமச்சந்திரன் தொடர்ந்து பல விஷயங்களை ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், இவர் பிபிசி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நானும் உமாவின் அக்கா வனஜாவும் நல்ல நண்பர்கள். வனஜா மூலமாகத் தான் உமா எனக்கு அறிமுகமாகினார். அதன் பின்ன நாங்கள் அனைவரும் குடும்ப நண்பர்கள் ஆனோம்.
சில வருடங்களாகவே உமா உடல் நலன் சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தாள். ஈரோட்டில் சிகிச்சையில் இருந்த போது, கடைசி மூன்று நாட்களாக தனது குடும்பத்தினரிடம் நேரில் வருமாறு கூறியுள்ளார்.
இதனால் அவர்களும், அவளுக்கு ஆறுதல் சொல்லி பார்ப்போம், முடியவில்லை என்றால் சென்னை அழைத்து வந்து விடலாம் என்று அங்கு சென்றனர்.
இன்று காலை 7 மணிக்கு அவர்கள் அங்கு போய் சேர்ந்தவுடன், உமா தன்னுடைய அம்மாவைப் பார்த்து வந்துவிட்டீங்கள? என்று கேட்டு அவர் கையை பிடித்து குடும்பத்தை கடைசியாக பார்த்த பின்னரே அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்று வேதனையுடன் கூறினார்.
உயிரிழந்த உமாவிற்கு இரண்டு சகோதரிகள், ஒரு தம்பி. இவள் இரண்டாவது மகள். கணவர் கால்நடை மருத்துவர்.
இன்னும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
உமா திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்த நிலையில், அவரது உடல் காட்டுப்பாக்கத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. அங்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.