மெக்சிகன் கடற்படை விமான விபத்து: 2 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய இரட்டை டர்போ விமானம், டெக்சாஸ் மாநிலம் கல்வெஸ்டன் வளைகுடாவில் திங்கட்கிழமை மாலை விபத்துக்குள்ளானது.
இதில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தில் மொத்தம் 8 பேர் இருந்தனர். அதில் 4 பேர் கடற்படை குழூவினர் மற்றும் 4 பேர் பொதுமக்கள்.
பொதுமக்களில் சிலர் தீக்காயம் அடைந்த நோயாளிகள் என அதிகரைகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேரத்தில், வளைகுடா பகுதியில் கனமான பனிமூட்டம் நிலவியது. கண்களுக்கு எதுவும் தெரியாத நிலை என அருகிலிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகள்
இந்த விபத்து (உள்ளூர் நேரப்படி) திங்கட்கிழமை மாலை 3.17 மணிக்கு நடந்துள்ளது.
US Coast Guard, Texas Department of Safety, FAA, NTSB ஆகியவை இணைந்து மீட்பு பணிகளையும், விசாரணையும் மேற்கொண்டு வருகின்றன.
ஆரம்பத்தில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வந்தது, பின்னர் அதில் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இன்னும் ஒருவர் கண்டுபிடிக்கப்படவில்லை, அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விமானப் பயணம்
இந்த விமானம் மெக்சிகோவின் யூகத்தான் மாநில தலைநகரான மெரிடா-வில் இருந்து புறப்பட்டு, Galveston Scholes சர்வதேச விமான நிலையம் நோக்கி வந்தது.
ஹூஸ்டனுக்கு தென்கிழக்கில் 50 மைல் தொலைவில் உள்ள இந்த விமான நிலையம், மருத்துவ அவசர சேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்த விபத்து, மெக்சிகோ கடற்படை மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தும் முக்கிய சம்பவமாக மாறியுள்ளது. பனிமூட்டம் காரணமாக ஏற்பட்டதாகக் கருதப்படும் இந்த விபத்து, சிறிய விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |