மெக்சிகோ பலூன் திருவிழாவில் தீ: காப்பாற்ற முயன்றவர் மரணம்! வைரல் வீடியோ
மெக்சிகோவில் நடைபெற்ற ஹாட் ஏர் பலூன் திருவிழாவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாட் ஏர் பலூன் திருவிழாவில் சோகம்
மெக்சிகோவின் ஜகாடெகாஸில் நடைபெற்ற முதல் ஹாட் ஏர் பலூன் திருவிழாவில் பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டு கொண்டிருந்த போது, ஒரு பலூனில் திடீரென தீப்பிடித்தது.
இந்த திடீர் சம்பவத்தின் போது அந்தத் தீப்பிடித்த பலூனில் இரண்டு பேர் உயிருக்கு பயந்து தொங்கிக் கொண்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
NEW: Man falls from the basket of a hot air balloon after it caught on fire in Zacatecas, Mexico.
— Collin Rugg (@CollinRugg) May 13, 2025
The man was seen hanging onto a rope as the balloon continued to go higher in the sky.
The incident unfolded when the basket caught fire on the ground. In a final act of… pic.twitter.com/BHAY9Bn7xJ
பலியான உயிர்
அப்போது, அந்தப் பலூன் கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, அதிலிருந்த 40 வயதான லூயிசியோ என்ற நபர், தன்னையும் மீறி மற்ற இருவரையும் காப்பாற்றினார்.
ஆனால், எதிர்பாராத விதமாக அவரால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
உள்ளூர் காவல் துறையினர் கூறுகையில், உயிரிழந்த லூயிசியோ என்ரிக் எஸ்ட்ராடா 2025 கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த முதல் பலூன் திருவிழாவில் கலந்து கொண்டவர் என்று தெரிவித்தனர்.
பொதுவாக, இதுபோன்ற பலூன் திருவிழாக்களில் ஏராளமான ஹாட் ஏர் பலூன்கள் பங்கேற்பது வழக்கம். மேலும், விமான சாகச நிகழ்ச்சிகள், பலூன் போட்டிகள் மற்றும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இடம்பெறும்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த துயரச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |