கடமையில் பொலிஸ் ஜோடி செய்த அசிங்கமான செயல்! இணையத்தில் வைரலான வீடியோ!
மெக்ஸிகோவில் சீருடையுடன் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார், பொது இடத்தில் ரோந்து வாகனத்தை நிறுத்தி, அதனுள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோ சிட்டியில் Ecatepec de Morelos நகராட்சியில் இந்த அருவருக்கத்தக்க சம்பவம் நடந்துள்ளது.
அவ்வழியாக சென்ற ஒரு அடையாளம் தெறியாத நபர் ஒருவர், ரோந்து காருக்குள் முன்பக்க இருக்கையில் இருந்தபடி பொலிஸ் ஜோடி சீருடையில் உல்லாசமாக இருந்துள்ளதை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஆண் காவலரின் ஒரு கை காருடன் விலங்கிடப்பட்டிருந்தது. இவர்களை வீடியோ எடுக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த வீடியோ காட்டுத்தீ போல் இணையத்தில் பரவியதை அடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் இந்த சம்பவம் உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, Ecatepec நகராட்சி காவல்துறையினர் "ஒழுங்கு முறையை மீறியதற்காக" இரண்டு அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.