வகுப்பறையில் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவன்., வெளிநாட்டில் அதிர்ச்சி சம்பவம்
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் பழங்குடி மொழி பேசியது ஒரு குற்றம் என பள்ளி மாணவன் வகுப்பறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மெக்சிகன் பள்ளி மாணவன் ஒரு வகுப்பறையில் தீ வைத்து மோசமாக எரிக்கப்பட்டான். இன பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வர போராடும் ஒரு நாட்டில் பழங்குடியின மொழியில் பேசியதே அவனது "ஒரே குற்றம்".
ஜூன் மாதம் மத்திய மாநிலமான குரேடாரோவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில், 14 வயது மாணவனான ஜுவான் ஜமோரானோவின் (Juan Zamorano) இருக்கையில் இரண்டு வகுப்பு தோழர்கள் மதுவை ஊற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஜுவான் தனது கால்சட்டை ஈரமாக இருப்பதை உணர்ந்து எழுந்து நின்றபோது, இரு மாணவர்களில் ஒருவர் ஜமோரானோ மீது தீ வைத்து எரித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்
அவர் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டார். இந்த வாரம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஜுவான் ஜமோரானோ மெக்ஸிகோவில் உள்ள ஓட்டோமி (Otomi) பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவராவார். அவர் ஏற்கனவே ஓட்டோமி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதன் காரணமாக பல வாரங்களாக கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகிவந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளித்ததாக அவரது குடும்ப வழக்கறிஞர்களின் கூறியுள்ளார்.
தேவைப்பட்டால், நாட்டின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் இந்த வழக்கைக் கையாளலாம் என்று ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் கூறினார்.
350,000 மக்கள்தொகையுடன், லத்தீன் அமெரிக்க நாட்டில் உள்ள சில பழங்குடி குழுக்களில் ஓட்டோமியும் ஒன்றாகும். ஓட்டோமி மொழி ஜுவானின் தாய் மொழி "ஆனால் அவர் அதை அதிகம் பேச விரும்பவில்லை, ஏனெனில் இது கேலி, துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு காரணமாகும்" என்று குடும்பத்தின் வழக்கறிஞர்களில் ஒருவரான எர்னெஸ்டோ பிராங்கோ ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
ஜமோரானோவின் பூர்வீகம் காரணமாக அவரது ஆசிரியர் கூட அவரை துன்புறுத்தியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மெக்சிகோவின் தேசிய பழங்குடியின மக்கள் நிறுவனம், பாகுபாடு மற்றும் இனவெறி நிகழ்வுகளைத் தடுக்க பள்ளிகளில் அவசர நடவடிக்கைகள் தேவை என்று கூறியுள்ளது.