மெக்சிகோவில் சிறை கலவரம்: பொலிஸாருடன் மோதலில் இறங்கிய கைதிகளின் குடும்பத்தினர்!
மெக்சிகோவில் சிறை கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸாருக்கும் கைதிகளின் உறவினர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
மெக்சிகோவில் பயங்கர சிறை கலவரம்
மெக்சிகோ நாட்டின் வில்ஹெர்மோசா நகரில் உள்ள ஒரு சிறையில் கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறைச் சம்பவம், இரண்டு முக்கிய குற்றவாளிகளை வேறு சிறைக்கு மாற்றும் நடவடிக்கையின் போது தொடங்கியுள்ளது.
மோதல் தீவிரமடைந்ததால், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இறுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உறவினர்கள் முற்றுகை
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஏராளமான கைதிகள் உயிரிழந்துவிட்டதாக சிறைக்கு வெளியே வதந்திகள் பரவியது.
இதனால் பதற்றமடைந்த கைதிகளின் உறவினர்கள் பெருமளவில் சிறை முன்பு திரண்டனர்.
அவர்கள் சிறைக்குள் நுழைய முயன்று தடுப்புகளை உடைக்க முற்பட்டதால், சிறைக் காவலர்களுடன் நேரடி மோதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |