இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த மெக்சிகோ - 1 பில்லியன் டொலர் கார் ஏற்றுமதி பாதிப்பு
மெக்சிகோ அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
இதனால், இந்தியாவிற்கு ஆண்டுக்கு 1 பில்லியன் டொலர் மதிப்பிலான கார் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படவுள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் ஏற்றுமதி சந்தையான மெக்சிகோ, இதுவரை 20 சதவீதம் வரி மட்டுமே விதித்து வந்தது.
ஆனால் புதிய முடிவின் படி, Volkswagen, Hyundai, Nissan, Maruti Suzuki போன்ற நிறுவனங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக, Skoda Auto Volkswagen India Pvt. Ltd. நிறுவனம், இந்தியாவில் இருந்து மெக்சிகோவிற்கு செல்லும் கார் ஏற்றுமதியின் 50 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது.
SIAM (Society of Indian Automobile Manufacturers), இந்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், “இந்திய வாகனங்கள் மெக்சிகோ உள்ளூர் தொழில்துறைக்கு அச்சுறுத்தல் அல்ல. அவை பெரும்பாலும் 1 லிட்டருக்கு குறைவான எஞ்சின் கொண்ட காம்பாக்ட் கார்கள். எனவே, வரி உயர்வைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
2024 நிதியாண்டில், இந்தியா மெக்சிகோவிற்கு 5.3 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதில் கார்கள் மட்டும் 1 பில்லியன் டொலர் மதிப்பை எட்டியுள்ளன.
Hyundai 200 மில்லியன் டொலர், Nissan 140 மில்லியன் டொலர், Suzuki 120 மில்லியன் டொலர் மதிப்பிலான கார்களை ஏற்றுமதி செய்துள்ளன.
மெக்சிகோ, அமெரிக்காவின் அழுத்தத்தினால் சீனாவுடனான வணிகத்தை குறைக்க முயற்சி செய்கிறது. இதன் விளைவாக, இந்தியாவும் பாதிக்கப்படுகிறது.
உள்ளூர் தொழில்துறையை பாதுகாக்கும் நோக்கில், மெக்சிகோ அரசு இந்த வரி உயர்வை அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mexico 50 percent tariff Indian car exports, Volkswagen Hyundai Nissan Maruti impact, Skoda Auto 50 percent of India shipments Mexico, India auto industry lobbying SIAM letter, Mexico import duty hike December 2025, US pressure Mexico China trade curbs, India 5.3 Billion Dollars exports Mexico FY24 data, Compact cars under 1L engine Mexico market, Indian vehicles not threat local industry, India Mexico trade relations tariff blow