மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச் சூடு: கனேடிய பெண் சுற்றுலா பயணி உயிரிழப்பு: 13 பேர் காயம்
மெக்சிகோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
திங்கட்கிழமை மெக்ஸிகோ நகரின் வடக்கே அமைந்துள்ள தியோதிஹுகான்(Teotihuacán) தொல்பொருள் ஆய்வகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் மொத்தம் 13 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் சந்திர பிரமிடு(Pyramid of the Moon) என்ற இடத்தில் மதிய நேரத்தில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகளில், துப்பாக்கிச் சத்தம் கேட்டு பொதுமக்கள் பயந்து ஓடுவது தெரிகிறது.
BREAKING: Canadian woman killed after shooter opens fire on tourists at Mexico’s Pyramids of Teotihuacán; multiple injured pic.twitter.com/dZVPcTudCv
— Rapid Report (@RapidReport2025) April 20, 2026
தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் பிரேசில், அமெரிக்கா, கொலம்பியாவை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு தாக்குதலை தொடர்ந்து சிதறி ஓடிய மக்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
உயிரை மாய்த்துக் கொண்ட தாக்குதல்தாரி
துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்திய நபர், பின்னர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என மெக்ஸிகோ பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபால் காஸ்டனெடா தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவ நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றும், கத்தி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |