கல்லூரி மீது குண்டு வீசுங்கள்! இஸ்ரேலிய பிரதமருக்கு கோரிக்கை: 20 மாணவி கைது
கல்லூரி மீது குண்டு வீச சொன்ன மாணவியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கல்லூரி மீது குண்டு வீசுங்கள்
அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக மாணவி ஒருவர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம், தனது கல்லூரி மீது குண்டு வீசுமாறு கேட்டுக் கொள்வது போன்ற வாட்ஸ்அப் செய்திக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக காவல்துறையின் தகவல் படி, கைது செய்யப்பட்ட மாணவி 20 வயதுடைய கேப்ரியலா சல்டானா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் மியாமியில் உள்ள பிரதான பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்கள் வாட்ஸ்அப் குழுவில் கேப்ரியலா சல்டானா அனுப்பிய செய்தியை பிற மாணவர்கள் வெளிப்படுத்தியை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
A Florida student was arrested and is now facing up to 15 years in jail for making a joke about Israeli Prime Minister Benjamin Netanyahu.
— Shadow of Ezra (@ShadowofEzra) April 20, 2026
The student allegedly wrote, “Netanyahu, if you can hear me, drop some bonbons for us Capstone students in the Ocean Bank Convocation… pic.twitter.com/j7r8Lu5nsq
விசாரணையின் போது, நகைச்சுவைக்காக அந்த குறுஞ்செய்தியை அனுப்பியதாக கேப்ரியலா சல்டானா தெரிவித்து இருந்தாலும், கல்வி நிறுவனங்கள் தொடர்பான புளோரிடாவின் சட்டங்களுக்கு கீழ் இது அச்சுறுத்தல் நடவடிக்கையாக கருதப்பட்டுள்ளது.
NBC மியாமி வெளியிட்ட தகவலில், கைது அறிக்கையில், அவர் 2026 ஏப்ரல் 10ம் திகதி வெள்ளிக்கிழமை வாட்ஸ் அப் குழு வழியாக அவர் தனிநபர்களை கொல்லப்போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |