டிக்டொக் நேரலையின் போது பிரபலம் சுட்டுக்கொலை
மெக்சிகோவை சேர்ந்த வலேரியா மார்க்வெஸ் என்ற 23 வயதான அழகுகலை நிபுணரை, டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், கடந்த மே 13 ஆம் திகதி, மெக்சிகோவின் சபோபனில் உள்ள தனது அழகு நிலையத்திலிருந்து, வலேரியா டிக்டொக்கில் நேரலை செய்து கொண்டிருந்தார்.
நேரலையில் சுட்டுக்கொலை
அப்போது பரிசு பொருளை டெலிவரி செய்வது அங்கு வந்த நபர் ஒருவர், வலேரியாவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே வலேரியா உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், பெண் ஒருவர் அந்த நேரலையை கட் செய்தார். அப்போது அந்த பெண்ணின் முகம் வீடியோவில் தெளிவாக பதிவானது.
துப்பாக்கியால் சுட்டவர் மற்றும் நேரலையை கட் செய்தவர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லை.
அதேவேளையில், மெக்சிகோவில் பாலினம் காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளதால், அந்த காரணத்தால் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |