கேப்டன் டூபிளெஸ்ஸின் அதிரடி ஆட்டம் வீண்! 16வது ஓவரிலேயே 173 ரன் இலக்கை எட்டிய MI
தென் ஆப்பிரிக்க டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், MI கேப்டவுன் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
டூபிளெஸ்ஸிஸ் ருத்ர தாண்டவம்
நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் MI கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஜோபர்க் அணியில் கேப்டன் பாப் டூபிளெஸ்ஸிஸ் ருத்ர தாண்டவம் ஆடினார். 38 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து கான்வே 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 172 ஓட்டங்கள் குவித்தது. ரீஸா ஹென்றிக்ஸ் 2 விக்கெட்டுகளும், லிண்டே, போஸ்ச் மற்றும் ரஷீத் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
ரிக்கெல்டன் சிக்ஸர் மழை
பின்னர் களமிறங்கிய MI கேப்டவுன் அணியில் வான் டர் டுசன் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
எனினும் ரியான் ரிக்கெல்டன் (Ryan Rickelton) சிக்ஸர் மழை பொழிந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 39 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் எடுத்தார்.
ஹென்றிக்ஸ் ஆட்டமிழக்காமல் 34 (28) ஓட்டங்கள் விளாச, MI கேப்டவுன் அணி 15.5 ஓவரில் 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |