காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகலா? குழம்பும் மும்பை அணி நிர்வாகம்
காயம் காரணமாக 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்குகிறது, இதற்கான மினி ஏலம் கடந்த 19ம் திகதி நடைபெற்று முடிந்துள்ளது.
இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணி Trade முறையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதுடன், அணியின் புதிய கேப்டனாக அவரையே நியமித்துள்ளது.
இதனால் 5 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா விலகுகிறாரா?
உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியில் ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேனாக இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் தன்னுடைய கணுக்கால் காயம் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
To new beginnings. Good luck, #CaptainPandya ? pic.twitter.com/qRH9ABz1PY
— Mumbai Indians (@mipaltan) December 15, 2023
சமீபத்தில் கேப்டன் பொறுப்பு வழங்கினால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் வருவதாக ஹர்திக் பாண்டியா நிபந்தனை வைத்ததாகவும், அதன் பெயரிலேயே ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் புதிய கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |