ஸ்பெயின் அணியின் வெற்றியால் ரூ.15 கோடி சம்பாதித்த மியா கலிஃபா
பிபா கால்பந்து உலககிண்ணத்தை ஸ்பெயின் வென்றதன் மூலம் மியா கலிஃபா ரூ.15 கோடி பெற்றுள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்
2026 பிபா கால்பந்து உலககிண்ணத்தின் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஸ்பெயின் அணிக்கு பரிசுத்தொகையாக 50 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.482 கோடி ஆகும்.
பிபா உலககிண்ணத்தை யார் வெல்வார்கள் என பலரும் ஆருடம் கூறிவந்த நிலையில், இதனை மையமாக வைத்து உலகளவில் கோடிக்கணக்கில் பெட்டிங் நடைபெற்றது.
ரூ.15 கோடி சம்பாதித்த மியா கலிஃபா
அதில் நடிகை மியா கலிஃபாவும் பெட்டிங் மூலம் பெருந்தொகையை ஈட்டியுள்ளார்.
லெபனானை பூர்விகமாக கொண்ட 33 வயதான பிரபல நடிகை மியா கலிஃபா, அமெரிக்காவிற்கு சென்று போட்டியை நேரில் கண்டுகளித்தார்.

ஸ்பெயின் அணிக்கு ஆதரவு தெரிவித்த அவர், லமின் யமாலின் பெயர் பொறிக்கப்பட்ட ஸ்பெயின் ஜெர்சியை அணிந்திருந்தார்.
ஸ்பெயின் வெற்றி பெறும் என 1 மில்லியன் டொலர் பந்தயம் கட்டிய ஸ்கிரீன் ஷாட்டை காட்டினார். இதன் மூலம் அவர் 1.6 மில்லியன் டொலர்( இந்திய மதிப்பில் ரூ.15.92கோடி) வென்றுள்ளார்.
அவர் பந்தயமாக ரூ.9.64 கோடி கட்டிய நிலையில், சுமார் ரூ. 6.27 கோடி லாபம் ஈட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றி பெற்றேன். என் தாய் நாடான ஸ்பெயினை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் (என் உடலில் ஒரு துளி கூட ஸ்பானிய இரத்தம் இல்லை) என குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |