மைக்கேல் ஜாக்சனின் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறீர்களா? இப்போது எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்
பாப் இசையின் மன்னர் என அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறீர்களா? மைக்கேல் ஜாக்சனுடைய நினைவாக லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, நேற்று இரவு அவர்கள் மூன்று பேரும் ஒன்றாக வந்திருந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மைக்கேல் ஜாக்சனின் பிள்ளைகள்
பிரபல பாப் இசை மற்றும் நடனக்கலைஞரான மைக்கேல் ஜாக்சனுக்கு பிரின்ஸ் (Prince), பாரிஸ் (Paris) மற்றும் ப்ளாங்கட் ஜான்சன் (Blanket Jackson) என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இதற்கு முன், 2009ஆம் ஆண்டு, தங்கள் தந்தையின் இறுதிச்சடங்கின்போது, சோகமே உருவாக பிள்ளைகள் மூவரும் ஒன்றாக நின்றிருந்த காட்சிகள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு நடிகர் நடிகைகள் கலந்துகொள்ளும் ஒரு பரிசளிப்பு விழாவில் மூன்று பேரும் ஒன்றாக பங்கேற்ற காட்சிகள் வெளியாகின.
அதற்குப் பின் அதிகம் அவர்கள் குறித்த செய்திகள் வெளியாகாத நிலையில், தற்போது, மைக்கேல் ஜாக்சனுடைய நினைவாக லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அவர்கள் மூன்று பேரும் ஒன்றாக வந்திருந்தார்கள்.
சிறுவர்களாக பார்த்த மைக்கேல் ஜாக்சனின் பிள்ளைகளான பாரிஸுக்கு இப்போது 25 வயதாகிறது. பிரின்சுக்கு 27 வயது, ப்ளாங்கட்டுக்கு 22 வயது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |