மிக மோசமான விபத்தில் சிக்கிய பிரீமியர் லீக் கால்பந்து வீரர்
வெஸ்ட் ஹாம் அணி வீரரான Michail Antonio மிக மோசமான சாலை விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் சிக்கி
இந்த விவகாரம் தொடர்பில் தர்போது பொலிசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 34 வயதான Michail Antonio சனிக்கிழமை டிசம்பர் 7ம் திகதி மிக மோசமான சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.
அவரது நிலை தற்போது ஆபத்து கட்டத்தில் இருந்து தப்பியுள்ளதாக வெஸ்ட் ஹாம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் நேரப்படி பகல் 12.50 மணிக்கு விபத்து தொடர்பில் தகவல் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
அவசர சேவைகள் சம்பவயிடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகனம் மீட்கப்பட்டது, சம்பவ இடத்தில் தற்போது பொலிசார் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் காணொளிக் காட்சிகள் வைத்திருக்கும் நபர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என கோரியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |