கோரத் தாண்டவம் ஆடும் மிக்ஜாம் புயல் : சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை (வீடியோ)
இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக விடாமல் விடிய விடிய மழை பெய்து கொண்டு இருகின்றது.
இதன் காரணாக பலரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது 14 கி.மீ வேகத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தினால் மூடப்பட்டு மின்சாரம் தடைசெய்யப்பட்டு பொது மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தொடருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறப்பு தொடருந்துகளாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமையை பற்றி தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |