'ரூ.5060 கோடி உடனே தேவை' - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
நிவாரணம் வழங்கும் திட்டம்
கடந்த நாட்களில் விடாமல் பெய்த மழையின் காரணமாகவும் மிக்ஜாம் புயல் காரணமாகவும் வெள்ளம் ஏற்பட்டு பல மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் வந்த புயலானது 14 கி.மீ வேகத்தில் சென்னையில் இருந்து ஆந்திராவை நோக்கி சென்றுள்ளது.
இதன் விளைவாக பலர் மின்சாரம் மற்றும் போக்குவர்த்து வசதி இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளனர்.
இந்த அனர்தத்தின் காரணமாக 17 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்
"தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.
இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
The Quint
சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு கடிதத்தை எழுதியுள்ளார்.
மேலும் இந்த கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமரிடம் நேரில் சென்று ஒப்படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |