27 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கைக்கு முடிவு! கண் கலங்கிய பிரபல வீராங்கனையை வாழ்த்திய ஒபாமாவின் மனைவி
40 வயதான செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அமெரிக்க ஓபன் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்
தனது கடைசி போட்டியில் செரீனா அவுஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக்குடன் மோதினார்
கடைசி போட்டியில் விளையாடிய பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைக்கு, பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 23 முறை வென்றுள்ள செரீனா, தனது கடைசி போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக்குடன் மோதினார்.
இந்தப் போட்டியில் அவர் தோல்வி அடைந்தவுடன் உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்கினார். மேலும் தனக்கு ஆதரவு அளித்த பெற்றோர் மற்றும் சகோதரிக்கு நன்றி தெரிவித்தார். செரீனா வில்லியம்ஸுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
Congrats on an amazing career, @SerenaWilliams!
— Michelle Obama (@MichelleObama) September 3, 2022
How lucky were we to be able to watch a young girl from Compton grow up to become one of the greatest athletes of all time.
I'm proud of you, my friend—and I can't wait to see the lives you continue to transform with your talents. pic.twitter.com/VWONEMAwz3
அந்த வகையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தனது பதிவில், 'செரீனா வில்லியம்ஸ் உங்களது சிறப்பான கேரியருக்கு வாழ்த்துக்கள்!
காம்ப்டனைச் சேர்ந்த ஒரு இளம் பெண் எல்லா காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக வளர்ந்து வருவதைப் பார்க்க முடிந்ததில் நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்.
என் தோழியே உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் உங்களை திறமையை நீங்கள் எப்படி மாற்றியமைக்க போகிறீர்கள் என்பதை காண என்னால் காத்திருக்க முடியவில்லை' என தெரிவித்துள்ளார்.
PC: AFP