பெண் ஊழியருடன் பில் கேட்ஸ் நெருக்கமாக இருந்தது குறித்து மௌனம் உடைத்த மைக்ரோசாப்ட் CEO
20 ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர், தொழில்நுட்ப பில்லியனர் பில் கேட்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் ஊழியருக்கு இடையிலான நெருக்கம் குறித்த விசாரணை குறித்து மைக்ரோசாப்ட் CEO Satya Nadella மௌனம் உடைத்துள்ளார்.
கடந்த மே 3-ம் தேதி பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென பிரிய என்ன காரணம் என்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது.
ஆனால், 2000-ம் ஆண்டு மைக்ரோசாப்ட்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் பில்கேட்ஸ் நெருக்கமாக இருந்ததாகவும், இந்த நெருக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பில்கேட்ஸ் திட்டமிட்டதாகவும், இதைத் தொடர்ந்து மெலிண்டா விவாகரத்துக்குத் தயாரானதாகவும் மைக்ரோசாப்ட் இயக்குநர் குழுவுக்கு கடிதம் கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் CEO Satya Nadella நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, மைக்ரோசாப்ட் நிறுவனம் 2000-ல் இருந்ததை விட 2021-ல் மிகவும் வேறுபட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு பிறகு எழுப்பப்பட்டுள்ள குற்றம்சாட்டு தொடர்பில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விசாரணை நடத்துகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திருந்தாலும், யார் வேண்டுமானாலும் எந்த பிரச்சினையை வேண்டுமானாலும் எழுப்ப முடியும்.
நாங்கள் அதை விசாரிப்போம், அதை எழுப்பியவரின் திருப்திக்கு நடவடிக்கை எடுப்போம்.அத்தகைய நல்ல சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
2006 ஆம் ஆண்டு முதல் பணியிட உறவுகளை ஊழியர்கள் வெளிப்படுத்த வேண்டிய ஒரு கொள்கையை நிறுவனம் கொண்டுள்ளது என்றும் Nadella சுட்டிக்காட்டினார்.