மைக்ரோசாப்ட் சேவைகள் சீரமைப்பு: முடிவுக்கு வந்த 24 மணி நேர உலகளாவிய முடக்கம்
Microsoft Restores All Services After Global Outage: 24 மணி நேர சேவை முடக்கத்திற்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் தனது சேவையை சீரமைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் சேவைகள் சீரமைப்பு
உலக அளவில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா துறைகளின் அன்றாட செயல்முறைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Microsoft 365 சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு பாதித்தது.

24 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த தொழில்நுட்ப கோளாறு ஒருவழியாக சரி செய்யப்பட்டு இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பல மணி நேரம் சர்வதேச அளவில் நீடித்த தகவல் தொடர்பு முடக்கமும் முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக X தளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட பதிவில், தங்கள் பொறியாளர்கள் தொழில்நுட்ப முடக்கத்திற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்து விட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தொழில்நுட்ப முடக்கத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களின் சேவைகளும் முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சர்வர் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த சிக்கல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவை வரலாற்றில் ஏற்பட்ட மிக நீண்ட நேர பாதிப்பாக பார்க்கப்படுகிறது.
அத்துடன் இந்தாண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய முடக்கம் இதுவாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடக்கத்திற்கு பின்னால் எந்தவொரு சைபர் தாக்குதலோ அல்லது வெளிநாட்டினரின் தலையீடோ இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.