டி20யில் 253 ஓட்டங்கள் இலக்கினை விரட்டிப்பிடித்த அணி! ஒரே ஓவரில் 31 ஓட்டங்கள் விளாசிய வீரர்
டி20 பிளாஸ்ட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மிடில்செக்ஸ் அணி 253 ஓட்டங்கள் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் இமாலய வெற்றி பெற்றது.
177 ஓட்டங்கள் கூட்டணி
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சர்ரே அணியில் வில் ஜேக்ஸ் மற்றும் லாவ்ரி எவன்ஸ் 177 ஓட்டங்கள் குவித்தனர்.
ஒரே ஓவரில் 31 ஓட்டங்கள் விளாசிய வில் ஜேக்ஸ் 45 பந்துகளில் 96 ஓட்டங்கள் (7 சிக்ஸர், 8 பவுண்டரிகள்) குவித்தார். அதே போல் எவன்ஸ் 37 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்கள் குவித்தது.
Exceptional batting from Will Jacks ?
— Vitality Blast (@VitalityBlast) June 22, 2023
He hits 31 from the over, just missing out on six sixes ?#Blast23 pic.twitter.com/RVrsw20clo
பிரம்மாண்ட வெற்றி
இமாலய இலக்கினை நோக்கி களமிறங்கிய மிடில்செக்ஸ் அணி தரமான பதிலடி கொடுத்தது. கேப்டன் எஸ்கினஸ்சி 39 பந்துகளில் 73 ஓட்டங்களும், மேக்ஸ் ஹோல்டன் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்தனர்.
ரியான் ஹிக்கின்ஸ் 24 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாச, மிடில்செக்ஸ் அணி 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 254 பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |