36 பந்தில் 66 ஓட்டங்கள்! அடித்து நொறுக்கிய 21 வயது இளம் வீரர்
டி20 பிளாஸ்ட் தொடரின் நேற்றைய போட்டியில் சோமர்செட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கிளமோர்கன் அணியை வீழ்த்தியது.
சோமேர்செட்
கார்டிஃப்பின் சோஃபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் சோமர்செட் மற்றும் கிளமோர்கன் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய கிளமோர்கன் அணி 19.3 ஓவரில் 171 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கேப்டன் கிரண் கார்ல்சன் 71 (45) ஓட்டங்களும், வான் டெர் குக்டேன் 48 (29) ஓட்டங்களும் விளாசினர். சோமர்செட் அணியின் தரப்பில் கிரேக் ஓவெர்ட்டன் மற்றும் ப்ரூக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், டேவி மற்றும் பென் கிரீன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Will Smeed led the way as @SomersetCCC defeated Glamorgan ?
— Vitality Blast (@VitalityBlast) June 21, 2023
He hit 66 from 36 as his side won their ninth match of #Blast23 ? pic.twitter.com/GxqhnYtXZI
அதனைத் தொடந்து களமிறங்கிய சோமர்செட் அணியில் டாம் பென்டன் 11 ஓட்டங்களில் வெளியேறினார். எனினும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய டாம் கோஹ்லர், தொடக்க வீரர் வில் ஸ்மீத் உடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார்.
இளம் வீரர் மிரட்டல் ஆட்டம்
சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட வில் ஸ்மீத் 36 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும். டாம் கோஹ்லர் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 62 ஓட்டங்களும், டாம் அபேல் 20 (16) ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் 17.1 ஓவர்களில் சோமர்செட் 2 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சோமர்செட் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
Getty
Twitter (Somerset)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |