கண்ணிமைக்கும் நொடியில் சூப்பர்மேன் போல் கேட்ச் பிடித்த வீரர்! மிரண்டு நின்று எதிரணியின் வீடியோ
டி20 பிளாஸ்ட் தொடரில் வீரர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகியுள்ளது.
சஸ்செக்ஸ் அபார வெற்றி
கவுண்டி மைதானத்தில் நடந்த போட்டியில், சஸ்செக்ஸ் அணி நிர்ணயித்த 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஹாம்ப்ஷையர் 177 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது.
ஹாம்ப்ஷையர்யின் துரத்தலின்போது பென்னி ஹோவெல் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
STOP WHAT YOU ARE DOING
— Vitality Blast (@VitalityBlast) June 16, 2023
BRAD CURRIE HAS JUST TAKEN THE BEST CATCH OF ALL TIME ?#Blast23 pic.twitter.com/9tQTYmWxWI
மின்னல் வேகத்தில் கேட்ச்
அவர் 25 ஓட்டங்களில் இருந்தபோது மில்ஸ் ஓவரில் ஷாட் அடிக்க, எல்லைக் கோடு நோக்கி சென்றுகொண்டிருந்த பந்தை, மின்னல் வேகத்தில் காற்றில் பறந்து ப்ராட்லி கர்ரி ஒற்றைக் கையால் கேட்ச் செய்தார்.
அவரது இந்த கேட்சை பார்த்து எதிரணி வீரர்கள் மிரண்டு போயினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Well, a @VitalityBlast debut doesn't get much better than that! ?
— Sussex Cricket (@SussexCCC) June 16, 2023
Three wickets and possibly THE BEST catch you will ever see! ? #SharkAttack pic.twitter.com/vgTAhiDJm2
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |