செனகல் கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு: 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு
Migrant boat capsizes at least 21 killed in senegal: செனகல் நாட்டின் கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
செனகல் அருகே கவிழ்ந்த அகதிகள் படகு
ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக பயணித்த புலம்பெயர்ந்தோர் படகு செனகல் நாட்டின் கடல் பகுதியில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செனகலின் வடமேற்கு பகுதியில் நிகழ்ந்த விபத்து சம்பவத்தில் குறைந்தது 21 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலில், கேபேமர்(Kébémer) மாவட்டத்தின் லூம்பூல் மணற்குன்றுகள் அருகே இந்த படகு விபத்தானது நிகழ்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக சனிக்கிழமை இரவு செனகல் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இதுவரை 21 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு இருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து நடந்த இடத்தை சுற்றி தேடுதல் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான படகில் பயணித்து உயிரிழந்த பலர் கேபேமர் பிராந்தியத்திற்கு உட்பட்ட லியோனா மற்றும் தியேப் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என Le Soleil நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.