செனகலில் 100 பேருடன் கடலில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் கப்பல்: பலர் மாயம்
Migrant Boat Capsizes near Senegal Coastline: செனகல் நாட்டு கடற்கரையில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்த சம்பவத்தில் பலர் காணாமல் போயிள்ளனர்.
கடலில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகு
செனல்கல் கடற்கரைக்கு அப்பால் Pirogue என அழைக்கப்படும் புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் கடலில் மூழ்கியுள்ளது.
கிட்டத்தட்ட 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிக் கொண்டு சென்ற இந்த படகு தலைநகர் டாக்கருக்கு தெற்கே அமைந்துள்ள Yenne என்ற கடற்கரை நகரத்திற்கு அருகே கரை ஒதுங்கியுள்ளது.
இதையடுத்து புதன்கிழமை அப்பகுதியில் முழுவதும் மீட்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

கரை ஒதுங்கிய படகை சோதனையிட்ட பொலிஸார், பயணிகளின் அடையாள ஆவணங்கள், பல கைப்பேசிகள் மற்றும் தனிப்பட்ட உடமைகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
டஜன் கணக்கானோரை காணவில்லை
ஆரம்பக்கட்ட தகவல்படி இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே இதுவரை உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கடலில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படகில் பயணித்த டஜன் கணக்கானோரின் நிலைமை இன்னும் என்னவென்று தெரியவில்லை.
உள்ளூர் கிராமத் தலைவரின் பிரதிநிதி ஓமர் சோவ் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில், கடலில் மூழ்கியவர்களின் அபயக் குரல்கள் கடற்கரை வரை தெளிவாக கேட்டதாக தெரிவித்துள்ளார்.