புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: 49 பேர் பலி, 100 பேர் மாயம்
வட அட்லாண்டிக் கடலில் புலம்பெயர்வோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த 49 பேர் பலியானார்கள், 100 பேரைக் காணவில்லை.
விபத்துக்குள்ளான புலம்பெயர்வோர் பயணித்த படகு
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு சிறிய நாடு Gambia. ஒரு வாரம் முன்பு, அங்கிருந்து ஒரு படகில் சுமார் 160 புலம்பெயர்வோர் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, Mauritania என்னும் நாட்டின் அருகில் பயணிக்கும்போது, தொலைவில் ஒரு நகரத்தில் மின்விளக்குகள் எரிவதைக் கண்ட அந்த படகிலிருந்தவர்கள், உற்சாகத்தில் படகின் ஒரு ஓரத்துக்குச் செல்ல, படகு கவிழ்ந்துள்ளது.
படகு கவிழ்ந்ததில் படகிலிருந்த 49 பேர் பலியானதாகவும் 100 பேரைக் காணவில்லை என்றும், 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், Mauritania நாட்டு கடலோரக் காவல் படை அதிகாரிகளும் பொலிசாரும் தெரிவித்துள்ளனர்.
அந்த படகு எந்த நாட்டை நோக்கிச் சென்றது என்பது தெரியவில்லை. ஆனாலும், ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா நோக்கிச் செல்லும் அந்த பாதை அபாயகரமானது என தெரிவிக்கின்றன சில தொண்டு நிறுவனங்கள்.
அத்துடன், இதுபோல ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயின் நோக்கிப் புறப்பட்டவர்களில் குறைந்தது 10,457 புலம்பெயர்வோர் இதுவரை கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |