பிரித்தானியாவில் உறையும் குளிரில் ஜலசமாதியான புலம்பெயர்ந்தோர்: பின்னணியில் 19 வயது இளைஞர்!
பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் படகொன்று கவிழ்ந்து விபத்துள்ளான சம்பவத்தில் இளைஞர் ஒருவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்
குறித்த விபத்தில் நால்வர் மரணமடைந்த நிலையிலேயே அதிகாரிகள் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். புதன்கிழமை இரவு, பிரான்ஸின் கலாயிஸ் துறைமுகத்துக்கு தெற்கே அமைந்துள்ள ஆம்பிள்ட்யூஸ் கடற்கரையிலிருந்து பிரித்தானியா நோக்கி ஆங்கிலக்கால்வாய் வழியாக பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சிறு படகொன்றில் புறப்பட்டுள்ளனர்.
@PA
ஆனால் குறித்த படகானது ஆங்கிலக்கால்வாயில் உறையவைக்கும் குளிரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் மரணமடைந்தனர். இந்த நிலையில், படகுடன் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் நுழைய முயற்சித்ததாக கூறி 19 வயது இப்ராஹிம் பா என்பவரை கைது செய்து அவர் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
குறித்த இளைஞர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் திங்கட்கிழமை ஃபோக்ஸ்டோன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர்களும்
குறித்த படகு கவிழ்ந்த விபத்தில் இளம் சிறார்கள் உட்பட மொத்தம் 43 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி அந்த படகில் அல்பேனியா, ஆப்கானிஸ்தான், ஈராக், செனகல் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் பயணித்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
@PA
சுமார் 50 பேர்கள் வரையில் அந்த படகில் பயணித்திருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். படகு விபத்துக்குள்ளான நேரம் அதிகாலை என்பதாலும் வெப்பநிலை -3C என பதிவாகியிருந்ததாலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்க அதிகாரிகள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதமும் இதுபோன்ற ஒரு படகு விபத்து ஆங்கிலக்கால்வாயில் ஏற்பட்டது. 34 புலம்பெயர்ந்தோருடன் புறப்பட்ட படகொன்று கால்வாயில் மூழ்க, அச்சம்பவத்தில் 31 பேர்கள் பலியாகினர்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
இந்த நிலையிலேயே, ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் புலம்பெய்ர்ந்தோரை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் திட்டமொன்றை வகுக்க இருப்பதாக இந்த வாரம் அறிவித்திருந்தார்.
@PA
மேலும், ஜூன் மாதத்தில் இருந்து ஆபத்தான படகு பயணம் மேற்கொண்டு பிரித்தானியாவில் நுழைந்துள்ள புலபெயர்ந்தோரின் எண்ணிக்கை 30,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.