புலம்பெயர் மக்களை நாடுகடத்துவது தீவிரப்படுத்த வேண்டும்: ஐரோப்பிய ஒன்றிய தலைவர் கருத்து
இத்தாலியை முன்மாதிரியாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலம்பெயர் மக்களை நாடுகடத்த வேண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா கருத்து தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோரின் நாடுகடத்தலை
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி புலம்பெயர் மக்கள் விவகாரத்தை மையமாகக் கொண்டு உச்சிமாநாட்டை நடத்துகின்றனர்.
இதன் ஒருபகுதியாக ஐரோப்பிய ஒன்றைய தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள உர்சுலா, புலம்பெயர்ந்தோரின் நாடுகடத்தலை அதிகரிப்பதற்கான சட்டத்திற்கான புதிய திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகி முன்வைக்க வேண்டும் என்றார்.
இந்த வார தொடக்கத்தில் அல்பேனியாவில் உள்ள மையத்திற்கு இத்தாலி சில புலம்பெயர் மக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. 16 ஆண்கள் புதன்கிழமை அல்பேனிய துறைமுகமான ஷெங்ஜினுக்கு மாற்றப்பட்டனர்.
ஆனால் சில மணி நேரத்திற்கு பின்னர், அதில் இருவர் சிறார்கள் என்றும், இருவர் மருத்துவ உதவி தேவைப்படுபவர் என வெளியானதை அடுத்து, அவர்கள் இத்தாலிக்கு திரும்பியுள்ளனர்.
கோரிக்கை நிராகரிக்கப்பட்ட
இந்த நிலையில் தற்போது பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் புலம்பெயர் மக்களை மூன்றாவது நாட்டிற்கு அனுப்பிவைக்கும் திட்டத்தை பரிசீலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மக்களை உகாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை நெதர்லாந்து அரசாங்கமும் பரிசீலனைக்கு எடுத்துள்ளது.
இத்தாலி அரசாங்கம் முன்னெடுத்துள்ள அல்பேனியா திட்டத்திற்கு 650 மில்லியன் யூரோ செலவாகியுள்ளது. கர்ப்பிணிகள், சிறார்கள் மற்றும் பலவீனமான நபர்களை அல்பேனியா அனுப்பும் திட்டத்தில் இருந்து இத்தாலி விலக்கு அளித்துள்ளது.
இருப்பினும் வலதுசாரி அரசியல்வாதியான பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |