விபத்தில் சிக்கிய புலம்பெயர் மக்களின் படகு... நூற்றுக்கணக்கானோர் மாயம்
தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே படகு ஒன்று கவிழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
300 பயணிகளுடன்
குறித்த சம்பவத்தில் 10 பேர்கள் உயிருடன் தப்பியதாகவும், ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது.

படகு மூழ்கி மூன்று நாட்களுக்குப் பிறகும் கடலில் இன்னும் பலர் காணப்படலாம் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். குறித்த படகானது 300 பயணிகளுடன் மியான்மரின் பூதிடாங் பகுதியில் இருந்து புறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லங்காவி கடற்பரப்பில் மீட்கப்பட்டவர்களில் மூன்று மியான்மர் ஆண்கள், இரண்டு ரோஹிங்கியா ஆண்கள் மற்றும் ஒரு வங்காளதேச ஆடவர் அடங்குவர் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ரோஹிங்கியா பெண் என்றும் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் முஸ்லிம்களாக இருக்கும் ரோஹிங்கியா சிறுபான்மையினர் அவ்வப்போது பௌத்தர்கள் பெரும்பான்மையான மியான்மரை விட்டு வெளியேறுகிறார்கள்.
இன்னும் இரண்டு படகுகள்
அவர்கள் தெற்காசியாவிலிருந்து வந்த வெளிநாட்டு ஊடுருவல்காரர்களாகக் கருதப்படுகிறார்கள், அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

மலேசியாவுக்குச் சென்ற மக்கள் ஆரம்பத்தில் ஒரு பெரிய கப்பலில் பயணித்துள்ளனர், ஆனால் அவர்கள் எல்லையை நெருங்கியதும், ஒவ்வொன்றும் சுமார் 100 பேரை ஏற்றிச் செல்லும் மூன்று சிறிய படகுகளில் ஏறுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இன்னும் இரண்டு படகுகள் என்ன ஆனது என்ற தகவல் வெளியாகவில்லை. தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |