வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகம்... பிரித்தானியாவில் புகலிட மேல்முறையீடு வாய்ப்பு
குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு புலம்பெயர்ந்தவருக்கு பிரித்தானியாவில் புகலிட மேல்முறையீடு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு
கடந்த 2022ல் பிரித்தானியாவுக்கு வந்த இலங்கையர், தானும் தனது மனைவியும் சொந்த நாட்டில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி புகலிடம் கோரியுள்ளார்.

ஏப்ரல் 2019ல் பிரித்தானியர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக அந்த நபர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் தொடர்பான விசாரணையை அடுத்து உள்விவகார அலுவலகம் அவருக்கு புகலிடம் மறுத்தது, ஆனால் அவர் பர்மிங்காமில் உள்ள குடிவரவு உயர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மறு விசாரணை
அத்துடன், முந்தைய விசாரணையில் நீதிபதி பாரபட்சமாக நடந்து கொண்டார் என்று வாதிட்டுள்ளார். ஆனால், துணை மேல் நீதிமன்ற நீதிபதி கிளேர் பர்ன்ஸ், முந்தைய நீதிபதிகள் யாரும் மிகவும் பாரபட்சமாக நடந்து கொள்ளவில்லை என்று மறுத்தார்.
மேலும் அந்த நபரின் நம்பகத்தன்மை குறித்து நீதிபதி முடிவுகளை எடுக்க முழுமையான மறு விசாரணைத் தேவை என்று கருதுவதாக நீதிபதி பர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உண்மை கண்டறியும் தன்மை மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு, மேல்முறையீட்டை முதல்-நிலை தீர்ப்பாயத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |