நடுக்கடலில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தவர்கள் படகு: நீரில் மூழ்கிய 20 பேர்! மீட்பு பணி தீவிரம்
இத்தாலி அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கவிழ்ந்த புலம்பெயர்ந்தவர்கள் படகு
இத்தாலியின் லம்பேடுசா தீவுக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 100 புலம்பெயர்ந்தவர்களுடன் லிபியாவிலிருந்து புறப்பட்ட சிறிய படகு புதன்கிழமையன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஐ.நா வின் அகதிகள் அமைப்பு (UNHCR) தகவல் தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறிய படகில் கிட்டத்தட்ட 92 முதல் 97 புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த நிலையில், 60 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் காணாமல் போன பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
UNHCR வழங்கிய தரவுகளின் படி, மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த 675 புலம்பெயர்ந்தவர்கள் இந்த ஆண்டு மட்டும் உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |