பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோர் படகு..சிறுமி உட்பட இருவர் மரணம்
புலம்பெயர்ந்தோர் படகு தரைதட்டியதால் பிரெஞ்சு கடற்கரையில் இருவர் உயிரிழந்தனர்.
புலம்பெயர்ந்தோர் படகு
80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிக் கொண்டு புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று பிரித்தானியாவை நோக்கி சென்றது.

மிகவும் நெருக்கடியான நிலையில் ஆட்களை ஏற்றிச் சென்ற அந்த படகு, Neufchatel-Hardelot அருகே அமைந்துள்ள ஒரு கடற்கரையில் தரைதட்டியது.
இதில் 16 சிறுமியும், 29 வயது பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பிராந்திய அரசு அதிகாரி Christophe Marx இதனை தெரிவித்தார்.

கடலில் தத்தளித்த சிலர்
அதிகாலை வேளையில் அவசரகால மீட்புப் பணியாளர்கள் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை கண்டறிந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இருவரும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடலில் தத்தளித்த சிலர் Boulogne-sur-Mer துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |