ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற சிறுபிள்ளைகள் உட்பட மூன்று பேர் பலி, மூன்று பேர் மாயம்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் சிறுபிள்ளைகள் உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளார்கள்.
சிறுபிள்ளைகள் உட்பட மூன்று பேர் பலி
நேற்று இரவு, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, பிரான்சின் Calais துறைமுகத்துக்கு அருகிலுள்ள Sangatte என்னுமிடத்தில் இரண்டு சிறுபிள்ளைகள் உட்பட மூன்று பேர் பலியானதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
38 பேர் பயணித்த படகொன்றில் அவர்கள் பயணிக்கையில், அந்த படகு கவிழ்ந்தபோது அந்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளார்கள்.
AFP
அத்துடன், மற்றொரு படகில் 115 புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க மேற்கொண்ட முயற்சியின்போது அவர்களுடைய படகு விபத்துக்குள்ளானதில் அவர்களில் மூன்று பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
படகிலிருந்த மற்றவர்கள் பிரெஞ்சு கடற்படை கப்பல் ஒன்றின் உதவியுடன் மீட்கப்பட்டு பிரான்சிலுள்ள Boulogne-sur-Mer என்னுமிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |