உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம்
லண்டனை நோக்கி பயணப்பட்ட குளிர்சாதன பெட்டி லொறிக்குள் உடல் உறையும் நிலையில் பதுங்கியிருந்த புலம்பெயர்ந்தோர் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
எரித்திரியா நாட்டவர்கள்
இந்த கோர சம்பவமானது வடக்கு பிரான்சின் கலேஸிலிருந்து 45 மைல் தொலைவில் உள்ள A26 பிரதான சாலையில் வைத்து வெளிச்சத்திற்கு வந்தது. சனிக்கிழமை பகல் தொடர்புடைய லொறியின் சாரதி ஓய்வெடுக்க வண்டியை நிறுத்திய நிலையில், 13 பேர்கள், அந்த லொறியை உடைத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த 13 பேர்களும் எரித்திரியா நாட்டவர்கள் என்றும், சாரதி தூங்கிய நிலையில் பின் வாசலை வலுக்கட்டாயமாக திறந்து அந்த 13 பேர்களும் உள்ளே நுழைந்துள்ளது தெரிய வந்தது.
அந்த சாரதி மொராக்கோவிலிருந்து பிரித்தானியாவுக்கு செர்ரி தக்காளிகளை எடுத்துச் சென்று கொண்டிருந்தார், நீண்ட பயணத்திற்குப் பிறகு மிகவும் களைத்துப் போயிருந்தார். அது குளிர்சாதன பெட்டி லொறி என்பதால், சில மணி நேரங்களுக்குள், அந்த 13 பேர்களும் கடுமையான குளிரில் போராடியுள்ளனர்.
ஆனால் லொறிக்குள் தங்களைப் பூட்டிக் கொண்டனர். இந்த நிலையிலேயே சாரதிகள் ஓய்வெடுக்கும் பகுதியில் இன்னொரு சாரதி தொடர்புடைய லொறியில் இருந்து சத்தம் கேட்பதை கவனித்துள்ளார். சம்பவம் நடக்கும் போது சனிக்கிழமை மதியத்திற்கு மேல் என்றே கூறப்படுகிறது.
நால்வர் ஆபத்தான நிலையில்
தாங்க முடியாத குளிரில் சிக்கிக்கொண்ட அந்த 13 பேர்களும், உயிருக்கு போராடியுள்ளனர். வாய்விட்டு கதறியும் கத்தி குரல் எழுப்பியும் உதவிக்கு மன்றாடியுள்ளனர். ஆனால், அந்த சத்தம் எதுவும் வெளியே கேட்கவில்லை.
தகவல் அறிந்து சனிக்கிழமை சுமார் 3 மணியளவில் சம்பவயிடத்திற்கு வந்த அவசர உதவிக் குழுவினர் மற்றும் மருத்துவர்கள் அந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் நால்வர் மிக ஆபத்தான நிலையில் இருந்ததால், அவர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அந்த 13 பேர்களில் சிறார்களை சமூக சேவை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சிலரிடம் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |