பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த 400,000 மக்களின் குற்றப்பின்னணி பரிசோதிக்கப்படவில்லை
பிரித்தானியாவுக்கு சட்டப்பூர்வமாக புலம்பெயர்ந்த சுமார் 400,000 பேர்களின் குற்றப்பின்னணி பரிசோதிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான சோதனை வேண்டும்
கடந்த 2021 முதல் இவ்வாறான சோதனை முன்னெடுக்கப்படவில்லை என வெளிச்சத்துக்கு வந்த நிலையில், கடுமையான சோதனை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பிரித்தானியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பாக பிரித்தானியாவுக்கு வருவோர் மட்டும் குற்றப்பின்னணி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க கோரும் நிலை உள்ளது.
கடந்த 2021 ஜனவரி முதல் 2024 மார்ச் வரையில் வேலைக்கான விசா வழங்கப்பட்ட 504,141 பேர்களில் 237,426 பேர்கள் குற்றப்பின்னணி பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
விசா விண்ணப்பம் செய்வோர்
அதில், சுமார் 154,000 குடும்ப உறுப்பினர்களும் பிரித்தானியாவுக்குள் வந்திருக்கலாம். இதனால் குற்றப்பின்னணி பரிசோதனைக்கு உட்படாதவர்கள் எண்ணிக்கை 391,000 கடந்துள்ளதாகவே அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசா விண்ணப்பம் செய்வோர் தங்கள் குற்றப்பின்னணி குறித்து தகவல் பதிவு செய்ய வேண்டும், ஆனால் பெரும்பாலானோர் பொய் சொல்வதாகவே கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 10,000 மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது பிரித்தானிய சிறைகளில் தண்டனை அனுபவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |