500,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு! பிரதமர் எழுப்பிய கேள்வி
ஸ்பெயினில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் குறித்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பிரதமர் பெட்ரோ சான்செஸ் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு வழங்கும் திட்டம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 500,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் இந்தக் கொள்கை, தகுதியான புலம்பெயர்ந்தோர் ஒரு வருடம் வரை குடியுரிமை மற்றும் பணி அனுமதி பெற அனுமதிக்கும்.
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஸ்பெயினில் குறைந்தது 5 மாதங்கள் வசித்த, குற்றப் பின்னணி இல்லாத ஆவணமற்ற குடியேறிகள், அத்துடன் அந்த ஆண்டின் இறுதிக்குள் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களும் இந்த விரைவுபடுத்தப்பட்ட வசிப்பிட அனுமதிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்த அனுமதியானது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும், (குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு) பின்னர் இதை நீட்டிக்க முடியும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, குடியேறிகள் ஸ்பெயின் நாட்டின் குடிமக்களாக ஆகலாம் அல்லது அவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலோ அல்லது புலம்பெயர்ந்தவர்களாக இருந்தாலோ அதற்கு முன்னதாகவே குடியுரிமை பெறலாம்.
கடும் எதிர்ப்பு
இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நடவடிக்கை படையெடுப்பை துரிதப்படுத்தும், வீட்டுவசதி நெருக்கடியை மோசமாக்கும் மற்றும் பொது சேவைகளை மூழ்கடிக்கும் என்று வலதுசாரி எதிர்ப்பாளர்கள் எச்சரித்தனர்.
கன்சர்வேடிவ் எதிர்க்கட்சியான Popular Partyயின் தலைவர் ஆல்பர்டோ நுனெஸ் ஃபீஜோ (Alberto Nunenz Feijoo), "இந்தத் திட்டம் ஈர்ப்பு விளைவை அதிகரித்து, நமது பொது சேவைகளை செயலிழக்க செய்யும். வீட்டு வசதி நெருக்கடியை மேலும் மோசமாக்கும். வாடகை மற்றும் வீட்டு விலைகள் சாதனை அளவை எட்டியுள்ள, உழைக்கும் வர்க்கக் குடும்பங்கள் நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் ஒரு நேரத்தில் இந்தத் திட்டம் வருகிறது" என தெரிவித்தார்.

'ஏற்கனவே கடுமையான வீட்டு வசதி நெருக்கடியால் தத்தளிக்கும் ஒரு தொழிலாளர் சந்தையில் மேலும் நூறாயிரக்கணக்கான மக்களை சேர்ப்பது, அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் மேலும் சிக்கலாக்கும்' என்றும் அவர் கூறினார்.
ஆனால், பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) இந்தத் திட்டத்தை ஆதரித்தார்.
அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஸ்பெயின் 'கண்ணியம், சமூகம் மற்றும் நீதி' பாதையைத் தேர்ந்தெடுப்பதாக வாதிட்ட அவர், 'உரிமைகளை அங்கீகரிப்பது எப்போது தீவிரமான ஒன்றாக மாறியது? பச்சாதாபம் காட்டுவது எப்போது ஒரு விதிவிலக்கான விடயமாக மாறியது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Some say we’re going too far, that we’re going against the current.
— Pedro Sánchez (@sanchezcastejon) January 30, 2026
When did recognising rights become something radical? pic.twitter.com/ka1nNKHVUC

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |