சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயரும் செவிலியர்களால் ஜேர்மனிக்கு ஏற்பட்டுள்ள பயங்கர பாதிப்பு
சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயரும் ஜேர்மன் நாட்டு செவிலியர்களால், ஜேர்மன் மருத்துவமனைகளுக்கு பயங்கர பாதிப்பு உருவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயரும் செவிலியர்கள்
ஊதியத்தில் உள்ள வித்தியாசம் போன்ற காரணங்களால், ஜேர்மன் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், அது, ஜேர்மன் மருத்துவமனைகள் மீது மோசமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது, நோயாளிகளின் மரணம் உட்பட!
ஆம், ஜேர்மன் மருத்துவமனைகளிலிருந்து 12 சதவிகித செவிலியர்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்துவிட்டதால், ஜேர்மனியில் நோயாளிகள் இறப்பு வீதம் 4.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இன்னொரு விடயம் என்னவென்றால், இப்படி ஜேர்மன் மருத்துவமனைகளிலிருந்து செவிலியர்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்துவிட்டதால், சுவிட்சர்லாந்துக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |