நாங்கள் கைகுலுக்க தயாராக இருந்தோம்; எதிரணியால் ஏமாற்றமடைந்தோம்..மௌனம் கலைத்த பயிற்சியாளர்
இந்திய அணி வீரர்களுடன் கைகுலுக்க தங்களது வீரர்கள் தயாராக இருந்ததாக பாகிஸ்தான் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
வழக்கமான நடைமுறை
கிரிக்கெட்டில் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கமான நடைமுறையாகும்.
ஆனால், நேற்றைய இந்தியா, பாகிஸ்தான் போட்டி முடிந்த பின்னர் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்க மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.
மேலும், இந்திய அணியினரின் உடைமாற்றும் அறைக்கு கைகுலுக்க பாகிஸ்தான் வீரர்கள் சென்றபோது அவர்கள் யாரும் வெளியே வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக் ஹெசன்
இந்திய அணி கைகுலுக்கும் நடைமுறையை புறக்கணித்தது பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசனை எரிச்சலடைய செய்துள்ளது.
இதுகுறித்து மௌனம் கலைத்த அவர், "நாங்கள் ஆட்டத்தின் முடிவில் கைகுலுக்கத் தயாராக இருந்தோம். எங்கள் எதிரணி அதை செய்யாததால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம். நாங்கள் கைகுலுக்க அங்கு சென்றோம்.
ஆனால் அவர்கள் ஏற்கனவே உடை மாற்றும் அறைக்குள் சென்றுவிட்டனர்.
போட்டி முடிவதற்கு இது ஏமாற்றமளிக்கும் வழியாகும். மேலும் நாங்கள் விளையாடிய விதத்தில் நாங்கள் ஏமாற்றமடைந்த போட்டியில், நிச்சயமாக நாங்கள் சென்று கைகுலுக்க தயாராக இருந்தோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |