உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் எங்களிடம் உள்ளார்! பாகிஸ்தான் பயிற்சியாளர்
பாகிஸ்தான் அணியில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது சிறப்பானது என்று பயிற்சியாளர் மைக் ஹெசன் பெருமையுடன் பேசியுள்ளார்.
மைக் ஹெசன்
ஆசியக் கிண்ணத் தொடரில் களமிறங்க உள்ள பாகிஸ்தான் அணி குறித்து பெருமையுடன் பேசியுள்ளார் பயிற்சியாளர் மைக் ஹெசன்.
இவர் பொறுப்பேற்றதில் இருந்து பாகிஸ்தான் அணி 13யில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனை குறிப்பிட்டு, தங்களது துடுப்பாட்ட குழு இன்னும் வளர்ச்சியடைந்து வருவதாக மைக் ஹெசன் (Mike Hesson) கூறுகிறார்.
150 ஓட்டங்கள் போதுமானதாக சில சமயங்கள் இருக்கும், அதேபோல் 190 ஓட்டங்கள் கூட போதாமல் இருக்கும். எனவே ஒரு துடுப்பாட்ட குழுவாக, ஆட்டத்தை வெல்ல என்ன தேவை என்பதை நீங்கள் முடிவு செய்து, அதை விட அதிகமாக நாம் பெற முடியுமா என்று பார்க்க வேண்டும் என்கிறார் ஹெசன்.
அணியின் அழகு
அதேபோல் பந்துவீச்சாளர்களின் சமீபத்திய செயல்பாடுகளால் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "எங்கள் அணியின் அழகு என்னவென்றால், எங்களிடம் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான முகமது நவாஸ் எங்களிடம் உள்ளார்.
மேலும் அவர் அணியில் திரும்பி வந்ததில் இருந்து, கடந்த ஆறு மாதங்களாக அந்த வகையில் தரவரிசையில் இருக்கிறார். அப்ரார் மற்றும் சுஃபியான் ஆகியோரும் அவர் செய்ததைப் போலவே சிறப்பாக செய்துள்ளார்கள்.
சைம் அயூப் இப்போது உலகின் முதல் 10 ஆல்ரவுண்டர்களில் ஒருவர். எனவே பந்துவீச்சில் அவரது மேம்பட்ட செயல்திறன் இதற்கு காரணம் என்பது தெளிவாகிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |