ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சிக்கு "மைக்" சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மைக் சின்னம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது. அதேபோல, பாஜகவும் தேர்தலை புறக்கணித்துள்ளது.
இதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில், 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் மொத்தம் 47 பேர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சீன்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சி கோரிய நிலையில் இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |