ராக்கெட் மழை பொழியும் ரஷ்யா.. எலான் மஸ்க்கின் உதவியை நாடிய உக்ரைன்!
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கிடம் உக்ரைன் உதவி கோரியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 3வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உலக நாடுகளின் உதவியை கோரி வருகிறார் .
இந்நிலையில், உக்ரைன் துணை பிரதமரும், டிஜிட்டல் உருமாற்றம் அமைச்சருமான Mykhailo Fedorov, எலான் மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளார்.
எலான் மஸ்க், நீங்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற முயற்சிக்கும்போது, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது.
உங்கள் ராக்கெட்டுகள் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக தரையிறங்கும்போது, ரஷ்ய ராக்கெட்டுகள் உக்ரேனிய குடிமக்களை தாக்குகின்றன.
@elonmusk, while you try to colonize Mars — Russia try to occupy Ukraine! While your rockets successfully land from space — Russian rockets attack Ukrainian civil people! We ask you to provide Ukraine with Starlink stations and to address sane Russians to stand.
— Mykhailo Fedorov (@FedorovMykhailo) February 26, 2022
உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் நிலையங்களை வழங்குமாறும், ரஷ்யர்களை நிறுத்துமாறு அழைப்புவிடுக்மாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என Mykhailo Fedorov ட்விட்டர் வாயிலாக மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளார்.