அனுமன் கோவில் பிரசாதம் மிளகு வடை: எப்படி தயாரிப்பது?
அனுமன் ஜெயந்திக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அவருக்கு வடை மாலை சாற்றப்படும்.
வருகின்ற 23ஆம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது நல்லது.
அந்தவகையில், ஹனுமான் கோவில் பிரசாதம் மிளகு வடை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 2 கப்
- மிளகு- ½ ஸ்பூன்
- சீரகம்- ¼ ஸ்பூன்
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுந்தை நன்கு கழுவி சுமார் ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பின் இதில் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்த மிளகு சேர்க்கவும்.
அடுத்ததாக சீரகம், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் சேர்த்து மாவை வடை போல் தட்டி பொறித்து எடுக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |