தித்திக்கும் சுவையில் பால் கேக்.., இலகுவாக செய்வது எப்படி?
இந்த சுவையான பால் கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் அட்டகாசமான பால் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொழுப்பு நிறைந்த பால்- 1½ லிட்டர்
- சர்க்கரை- 200g
- வினிகர்- 3 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- நட்ஸ்- தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயில் பால் ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்த பிறகு இதில் கொஞ்சம் கொஞ்சமாக வினிகர் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து நன்கு கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு கலந்து பால்கோவாவின் பக்குவதற்கு வந்ததும் ஏலக்காய் தூள் மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கவும்.
பின் நன்கு பொன்னிறமாக வந்தவுடன் நட்ஸ் சேர்த்து அடுப்பில் இருந்து எடுத்து பாத்திரத்திற்கு மாற்றவும்.
இறுதியாக இதை மூடிவிட்டு எட்டு மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிட்டு துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |