பிரான்சில் மீண்டும் ஒரு அருங்காட்சியகக் கொள்ளை
Thieves steal artworks worth 9 million Euros from France's Renoir museum: பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து கொள்ளையர்கள் 9 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான கலைப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பிரான்சின் பிரபல Louvre அருங்காட்சியகத்திலிருந்து கொள்ளையர்கள் 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அரியவகை நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆகிறது. இன்னமும் அந்த நகைகள் சிக்கவில்லை.
இந்நிலையில், பிரான்சில் மீண்டும் ஒரு அருங்காட்சியகக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரான்சில் மீண்டும் ஒரு அருங்காட்சியகக் கொள்ளை
நேற்று அதிகாலை 5.48 மணியளவில், தெற்கு பிரான்சிலுள்ள Cagnes-sur-Mer என்னுமிடத்தில் அமைந்துள்ள Renoir அருங்காட்சியகம் என்னும் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள், 4 அரிய கலைப்பொருட்களை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

அப்படி ஓடும்போது ஒரு கலைப்பொருளை தவறவிட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள் அவர்கள். இந்தக் காட்சிகள் அங்கிருந்த CCTV கமெராக்களில் பதிவாகியுள்ளன.
கொள்ளையடிக்கப்பட்ட கலைப்பொருட்களின் மதிப்பு, 9 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
இந்த Renoir அருங்காட்சியகம் என்பது, பிரபல ஓவியரான Pierre-Auguste Renoir என்பவர் வாழ்ந்த வீட்டில், அவரது நினைவாக உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |